முசிறியில் நம்மாழ்வாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

56பார்த்தது
முசிறியில் நம்மாழ்வாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
முசிறியில் தா. பேட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நம்மாழ்வாரின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம் முசிறியில் தா. பேட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பசுமை சிகரம் அறக்கட்டளை சார்பில் நம்மாழ்வாரின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பசுமை சிகரம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் யோகநாதன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவர் அருள்மொழிவர்மன், தொழிலதிபர் சுப்பிரமணிய சிவா, துரை, முசிறி தமிழ் சங்க செயலாளர் நித்தியானந்தம், நாம் தமிழர் கட்சி பிரமுகர் நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு நம்மாழ்வார் சிறப்புகள் பற்றி பேசினர். கூட்டத்தில் நம்மாழ்வார் தெரிவித்தபடி துவக்கப் பள்ளிகளில் இயற்கை விவசாய முறைகளின் படி மூலிகை செடி வளர்க்கும் முறைகள், உணவு முறைகள் ஆகியவற்றை சிறுவயதிலேயே மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளும் காய்கறி தோட்டம் அமைத்து அதில் காய்கறிகள் , கீரைகளை சாகுபடி செய்து அதனை சத்துணவில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திரளான இயற்கை விவசாயிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி