காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் ஒரு பக்கம் ஏராளமானோர் கொல்லப்பட்டுவரும் வேளையில், மறுபக்கம் காசாவில் உணவுப் பஞ்சம் காரணமாக பலரின் உயிரும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ரூ.5க்கு விற்கப்படும் ஒரு பாக்கெட் பார்லே-ஜி பிஸ்கட் காசாவில் ரூ. 2342 என விற்கப்படுகிறது. அதனை தந்தை ஒருவர், தனது மகள் கேட்டதற்காக இவ்வளவு விலை கொடுத்து வாங்கியுள்ளார். உலகம் முழுவதும் இருந்து உணவு பொருட்கள் காசாவுக்கு அனுப்பி வைத்தாலும், அதை இஸ்ரேல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.