திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மாணவர் பரத், பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளார். மேலும், மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். பச்சமலைப் பகுதியில் CLAT தேர்வில் தேர்ச்சிப் பெற்று, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலை.-யில் உயர்கல்வி பயில தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்ற சாதனையையும் பரத் படைத்துள்ளார்.