ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மநீம தலைவர் கமல்ஹாசன் பதிவில், "தியாகத்தைப் போற்றும் பெருநாளான பக்ரீத் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். சமத்துவமும் சகோதரத்துவமும் நிலவுவதாக" என்றார்.