நாடு முழுவதும் நேற்று (ஜூன் 6) ஒரே நாளில் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இதுவரை 5,365 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில், 220க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.