இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சையில் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.