திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் மழை நீர் பெருக்கெடுத்து பேருந்து நிலையம் முன்பு குளம்போல் தேங்கி காட்சியளித்தது. இதனால் அவ்வழியே சென்ற வாகனங்கள் பேருந்து நிலையத்திற்குள் சென்று அச்சாலையை கடந்து சென்றனர்.