வயநாடு மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்கும் பிரியங்கா காந்தி

81பார்த்தது
வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று (நவ., 30) வருகை தரும் எம்.பி., பிரியங்கா காந்தி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். 2 நாள் பயணமாக வருகை தரும் அவர், இன்று மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளிலும், நாளை வயநாடு தொகுதியிலும் வாக்காளர்களை சந்திக்கிறார். பிரியங்கா காந்திக்கு வழி நெடுக காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர். இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 622,338 வாக்குகள் பெற்று, 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

தொடர்புடைய செய்தி