வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு

7109பார்த்தது
திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள மாத்தூர் விவேகானந்த நகர் தெற்கு பகுதியில் வசித்து வருபவர் தவசி. இவரது வீட்டுக்குள் நேற்று மாலை 7அடி நீளமுள்ள மஞ்சள் சாரை பாம்பு ஒன்று உள்ளே நுழைந்ததை கண்ட குடும்பத்தினர் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் இதுகுறித்து வார்டு உறுப்பினர் பாரதிராஜா அளித்த தகவலின் படி நவல்பட்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு பாம்பு பிடிக்கக்கூடிய இடுக்கிகளை கொண்டு பாம்பை பிடிக்க முற்பட்டனர். அப்போது அந்த பாம்பு வீட்டில் இருந்த மீன்வலையில் சிக்கிக் கொண்டது.

இதனை தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் அந்த பாம்பை லாவகரமாக பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி