திருச்சி: ஏழ்மையின் உலகம் அறக்கட்டளை 3ம் ஆண்டு துவக்க விழா

85பார்த்தது
திருச்சி: ஏழ்மையின் உலகம் அறக்கட்டளை 3ம் ஆண்டு துவக்க விழா
திருச்சி: ஏழ்மையின் உலகம் அறக்கட்டளை மூன்றாமாண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 10 மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு மளிகை பொருள்கள், 15 ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருள்கள், 20 குழந்தைகளுக்கு கல்வி உபகரண பொருள்கள், மற்றும் 15 இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திருச்சி நடிகரும், சமூக ஆர்வலருமான மிளகுபாறை ராஜேஸ் தலைமை தாங்கினார். முன்னிலை மதியழகன் ரேணுகாதேவி, பி. குமணண், இரா. செந்தில் குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். ஏழ்மையின் உலகம் அறக்கட்டளையின் நிறுவனர் டி. விஜயேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கே. நந்தினி, எம். விஜய், ஜெ. வேதகுமரன், எம். வினோத் ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து விருந்தினர். விழா கொடையாளர்கள் கோர்ட் வெங்கடேசன், ஆல்வின் டைலர் போன்றோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் நாட்டுபுற நடனம், பரதம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி