சீமான் பா. ஜனதாவுக்கு வாக்களிக்க தயார்

65பார்த்தது
சீமான் பா. ஜனதாவுக்கு வாக்களிக்க தயார்
கரூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து திருச்சி மாவட்டம் மணப்பாறை பஸ் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது. 5 வருடத்திற்கு ஒருமுறை சட்டையை கழற்றி கொண்டு புதுப்பித்து கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. அந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்துங்கள். மீண்டும் தி. மு. க. , அ. தி. மு. க. , பா. ஜனதா, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அந்த பாவம் எல்லாம் உங்களை சும்மா விடாது. 10ஆண்டு கால மோடி ஆட்சியில் ஏதாவது ஒரு நல்ல திட்டங்களை சொல்ல சொல்லுங்கள். மொத்த நாடும் கைதட்டி சொல்லும் ஏதாவது ஒரு திட்டத்தை சொல்ல முடியுமா? மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் ஒரு நல்ல திட்டத்தை சொல்ல முடியுமா? இந்த முறை மாற்றத்தை தாருங்கள். நான் கடந்த 6மாதங்களுக்கு முன்பு கூட கச்சத்தீவு தொடர்பாக மத்திய மந்திரி அமிஷாவுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் எதுவும். நடக்கவில்லை. இப்போது மீட்டால் கூட பா. ஜனதாவுக்கு வாக்களிக்க தயார். இவ்வாறு அவர் பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி