ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 11 பேர் வழக்குபதிவு

575பார்த்தது
திருச்சி மாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மருதூர் ஊராட்சியில் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் உரிய விதிமுறைகளை அதிகாரிகள் கடைபிடிக்காமல், இறந்தவர்கள் பெயரிலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை பயனாளிகளாக காட்டியும், ஒரே வீட்டை இருவரது வீடாக காட்டியும் செய்யப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார், முறைகேடு நடந்ததாக கூறப்படும் 2019ம் ஆண்டு முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றி, தற்போது வேறு ஒன்றியங்களில் பணியாற்றி வரும், துறையூர் மேற்பார்வையாளர் வெங்கடேஷ்குமார், தொழில்நுட்ப உதவியாளர் கிளின்டன், தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார், புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், புள்ளம்பாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், மண்ணச்சநல்லுார் மண்டல துணை வட்டார வளரச்சி அலுவலர் லோகநாதன், புள்ளம்பாடி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்ராஜ், அந்தநல்லுார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காளிதாஸ், இளநிலை பொறியாளர்கள் ரங்கநாதன், தாத்தையங்கார்பேட்டை பரணிதர், அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக தனிநபர் தமிழ்செல்வன் ஆகிய 11 பேர் மீதும் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.