லாரி மீது அரசு பஸ் மோதியதில் 11 பேர் காயம்

5138பார்த்தது
லாரி மீது அரசு பஸ் மோதியதில் 11 பேர் காயம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் லாரி டிரைவர் அப்பாத்துரை(35 வயது). இவர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் சென்று கொண்டிருந்தார். இதே வேளையில் சென்னையிலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இதனை மதுரை மாவட்டம் மேலூர் கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்த சிவா(46) ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் சமயபுரம் அருகே கொணலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அரசு பேருந்து நடத்துனர் உட்பட 11 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி