தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உற்சாக வரவேற்பு!

65பார்த்தது
கடலையூர் கிராமத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயசீலனுக்கு உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய சீலனுக்கு
எட்டையாபுரம் அருகே உள்ள கருப்பூர், மேலகரைந்தை, நாகலாபுரம், கடலையூர் பகுதிகளில் சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார், அப்போது கடலையூர் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த விஜய சீலனுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் செண்டை மேளம் அடித்து உற்சாக வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து, எட்டையாபுரம் பட்டத்து விநாயகர் கோவில், இளம்புவனம், பகுதிகளில் விஜயசீலன் சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார், இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் ராம்கி தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆன்மிகபிரிவு, மாவட்டச் செயலாளர் ஆர்த்திராஜ், ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி