MLA உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பு!

61பார்த்தது
MLA உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பு!
விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பு!

தேர்தல் பிரச்சாரம் இன்னும் இரண்டு நாட்கள் நிறைவடையும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து இரவு பகலாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக துணை பொதுச் செயலாளரும் மகளிர் அணி மாநில தலைவியுமான திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவலார்பட்டி, வடக்கு முத்தையாபுரம், சென்னம்மா ரெட்டியபட்டி, முத்துச்சாமிபுரம், அயன் பொம்மையாபுரம், ஜமீன் கரிசல்குளம், குமராபுரம், கோடாங்கிபட்டி, குருவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் இந்திய கூட்டணி கட்சியினருடன் இணைந்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Job Suitcase

Jobs near you