உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் புத்தாண்டு திருப்பலி;

58பார்த்தது
2024 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் வகையில் தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ் பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி ஏராளமானவர்கள் பங்கேற்பு


உலகம் முழுவதும் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது இந்த புத்தாண்டை வரவேற்கும் வகையில் தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

பேராலய பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இந்த ஆண்டு மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ பிரார்த்தனை மேற்கொண்டனர்.

மேலும் எந்த ஒரு பேரிடரும் வராமல் உலக மக்கள் அனைவரும் அமைதியாக வாழவும் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

இந்த புத்தாண்டு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டனர்.

இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.


நள்ளிரவுக்கு பிறகு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர் இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் மேலும் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி