வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

81பார்த்தது
வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
தூத்துக்குடியில் அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் வாக்காளர் கல்விக்குழுவின் சார்பில் நடைபெறவிருக்கும் 18வது மக்களவைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிலைக்காட்சி கல்லூரி வாசல் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டது. பின் கல்லூரி பேருந்து நிறுத்தம், சிவந்தாகுளம் தெரு, பழைய கலெக்டர் அலுவலக சந்தை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா வழிகாட்டுதலின்படி கல்லூரி வாக்காளர் கல்விக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான திருமதி ஜெயபார்வதி மற்றும் சண்முக செல்வ சிவசங்கரி ஆகியோர் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி