தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி வீதியுலா!

81பார்த்தது
தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி வீதியுலா!
தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடைபெற்றது.

தூத்துக்குடியில் உள்ள, ‘சிவன் கோயில்’ என அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது. திருவிழா நாள்களில் காலையும் இரவும் சுவாமி -அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாளில் சுவாமி அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா மற்றும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு ஆறுமுகப்பெருமான் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி