ரேஸ், வீலிங் செய்யும் இளைஞர்களின் பைக் பறிமுதல்: எஸ்பி

64பார்த்தது
ரேஸ், வீலிங் செய்யும் இளைஞர்களின் பைக் பறிமுதல்: எஸ்பி
தூத்துக்குடி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கிடையாது மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ் மற்றும் வீலிங் செய்யும் இளைஞர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்படுபவர் அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

இன்று நள்ளிரவு புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்

தூத்துக்குடி மாநகரில் மற்றும் மாவட்டத்தில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது புத்தாண்டு அன்று நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் குதூகுல கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது


புத்தாண்டை ஒட்டி பந்தயம் வைத்து பைக் ரேஸ் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அவ்வாறு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் ரேஸ் மற்றும் வீலிங் போன்ற சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அவர்கள் கைது செய்யப்பட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி