சிவன் கோயிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு!

569பார்த்தது
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயம் மற்றும் வைகுண்டபதி பெருமாள் கோவிலில் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்றபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது இதயொட்டி தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம்பியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது கோ பூஜையும் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர்


இதேபோன்று வைகுண்டபதி பெருமாள் ஆலயத்திலும் பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு மழை வெள்ளங்களால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் அதனால் வரும் 2024 ஆம் ஆண்டு மழை வெள்ளத்தில் இருந்து மீண்டு வரவும் விவசாயம் செழித்து வளர சிவபெருமானை வழிபட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி