தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன்: தகவல்!

4029பார்த்தது
தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன்: தகவல்!
வெள்ளத்தால் பாதிப்படைந்த தொழில் நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  "கடந்த டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அன்றைய தினமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.   வெள்ளத்தில் பாதிப்படைந்த பெட்டிகடை, சிறு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்ந வட்டியில் கடன் வழங்கிட முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளாா். ஆகவே வெள்ள நீர் புகுந்ததால் தொழில் பாதிப்படைந்தவர்கள் சட்ட மன்ற அலுவலகத்தில் மனு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மழை வெள்ளத்தால் பகுதியாக அல்லது முழுமையாக வீடு இடிந்தவர்கள் ஒரு போட்டோ எடுத்து வைத்து வி. ஏ. ஓ. விடம் தெரியப்படுத்தி பயன்பெறலாம் என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி