ஜவுளி நிறுவனத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

51பார்த்தது
ஜவுளி நிறுவனத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
தூத்துக்குடி கே. சின்னத்துரை அன்கோ நிறுவனத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  


ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தென் தமிழகத்தில் புகழ்பெற்ற, திருச்செந்தூர் மற்றும் ஏரலில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல பிரபல ஜவுளி நிறுவனமான கே. சின்னத்துரை அன்கோ, தூத்துக்குடி தமிழ் சாலையில் இயங்கி வருகிறது.  


கே. சின்னத்துரை அன்கோ ஜவுளி மற்றும் நகைக் கடையின் சார்பில் ஆடவர் பிரிவு தளத்தின் கீழ் ரமலான் மாதத்தின் தினமும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இது இஸ்லாமிய வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே. திருநாவுக்கரசு, எஸ். அரிராம கிருஷ்ணன், டி. நமசிவாயம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி