பெண் காவலரின் கணவர் தற்கொலை!

2950பார்த்தது
பெண் காவலரின் கணவர் தற்கொலை!
தூத்துக்குடியில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில், பெண் காவலரின் கணவர் தூக்குபோட்டு தற்காெலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி 3வது மைல் ஆயுதப்படை குடியிருப்பில் வசிப்பவர் சவுந்திர பாண்டியன் மகன் பட்டுராஜா (48). இவர் என். டி. பி. எல். , அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (40), ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு திருமணமாகி 14 ஆண்டுகளாகிறது. இந்நிலையில் நேற்று பட்டுராஜா தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம்: தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன் மகன் ஆனந்த கிருஷ்ணன் (36). திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தையில்லையாம். இதனால் மனவேதனையில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி