களத்தில் நின்று மக்கள் பணியாற்றிய கனிமொழி எம்பி பாராட்டு!

1085பார்த்தது
களத்தில் நின்று மக்கள் பணியாற்றிய கனிமொழி எம்பி பாராட்டு!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதன் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடியில் தங்கி இருந்து மக்கள் பணியாற்றினார் மேலும் பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று களத்தில் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி, நிவாரண பொருட்கள், மற்றும் மீட்பு பணி என பல்வேறு பணிகளை நேரடியாக களத்தில் நின்று பணியாற்றினர். இதனால் மக்கள் மனதில் கனிமொழி கருணாநிதி எம்பி பெரும் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் லெஜேண்ட் சரவணன் நற்பணி மன்றம் சார்பில் முத்துதுரை கனிமொழி கருணாநிதி எம்பி அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி உடன் இருந்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி