போக்குவரத்திற்கு இடையூறாக குப்பைகள் குவிப்பு:

1047பார்த்தது
போக்குவரத்திற்கு இடையூறாக குப்பைகள் குவிப்பு:
தூத்துக்குடியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  


தூத்துக்குடி மாநாகராட்சி டூவிபுரம் 2வது தெருவில் தனியார் பழைய பேப்பர், இரும்பு சேகரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் வாசலில் குவிந்துள்ள பழைய அட்டை, பேப்பர் மற்றும் சாக்கு மூடைகளால் அந்தப் பகுதியில் மிகவும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


குறிப்பாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் செல்லும் மினி பேருந்துகள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் இப்பகுதி வழியாகவே செல்கின்றனர். மேலும் இந்த பகுதியில் டிடிடிஏ ஸ்கூல் மற்றும் சர்ச்சும் உள்ளது.  


தூத்துக்குடி மாநகராட்சி மேயர் உடனடியாக நேரில் ஆய்வு செய்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முத்து கேட்டுக் கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you