மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழாரம் சூட்டியுள்ளார். மதுரையில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் உரையாற்றிய ராஜேந்திர பாலாஜி, "அப்பழுக்கற்ற அரசியலை கையில் எடுத்தவர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த். நியாயமான வழியில் செல்ல வேண்டும் என்று தன்னுடன் இருப்பவர்களுக்கு கற்றுக் கொடுத்தவர். பிறர் வாழ தன்னுடைய பணத்தை எடுத்துச் செலவழித்தவர்" என்று கூறியுள்ளார்.