காய்கறி சந்தையில் வாழை இலைகள் விலை பல மடங்கு உயர்வு!

84பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை விவசாயம் முக்கியமானதாகும் இங்கு வாழைத்தார் மற்றும் வாழை இலை அதிக அளவில் தூத்துக்குடி மட்டுமல்லாது விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும்

தூத்துக்குடி மாவட்டத்தில் குரும்பூர், ஏரல், சாயர்புரம், கோரம்பள்ளம், வாழவள்ளான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாழை விவசாயிகள் வாழை இலைகளை அறுவடை செய்து தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்

சுப முகூர்த்த தினம் மற்றும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் வாழை இலை அதிக அளவு ஏலம் போனது கடந்த வாரம் சுமார் ஆயிரம் ரூபாய் விற்பனையான வாழை இலை கட்டு தற்போது 3500 ரூபாய் முதல் 6300 ரூபாய் வரை விற்பனை ஆனது பல மடங்கு விலை உயர்ந்து வாழை இலை விற்பனையானதால் வாழை இலை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த விலை உயர்வு வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி வரை இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்

இதேபோன்று வாழைத்தார்கள் விலையும் சற்று உயர்ந்து காணப்பட்டது பூஜைக்கு வாங்கப்படும் நாட்டு தார் ரூ. 600 ரூபாய் வரையும் பஜ்ஜிக்கு பயன்படும் சக்கை வாழைத்தார் ரூபாய்400 ரூபாய் வரையும் விற்பனையானது செவ்வாழை தார் 800 ரூபாய் வரை விற்பனையானது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி