தினபூமி நாளிதழ் சார்பில் மருத்துவ முகாம்!

67பார்த்தது
தினபூமி நாளிதழ் சார்பில் மருத்துவ முகாம்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடையனோடை கிராமத்தில் தினபூமி நாளிதழ் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, கடையனோடை கிராமத்தில் உள்ள ஒய். எம். சி. எ. திருமண மண்டபத்தில் மதுரை ரியோ மருத்துவமனையுடன் தினபூமி நாளிதழ் நிறுவனத்தினர் இணைந்து நடத்திய மருத்துவ முகாம் நடைபெற்றது. மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் டாக்டர் அக்ஷயா, பொது மருத்துவ டாக்டர். அஷ்மிகா, குழந்தை மருத்துவ டாக்டர். அஸ்வின் மற்றும் செவிலியர் கொண்ட குழுவினர் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை அளித்தனர்.  


நிகழ்ச்சியில் போர்வை, கொசு வலை, வேஷ்டி, சேலை, துண்டு வழங்கினர். பெல்லா நிறுவனத்தின் குழந்தைகளுக்கு பேபி டயப்பர்கள், மற்றும் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கபட்டது. முகாம் ஏற்பாடுகளை மதுரை - திண்டுக்கல் ரியோ குழந்தைகள் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம். சரவணன் உத்திரவின்படி மக்கள் தொடர்பு அலுவலர், மற்றும் தினபூமி மேலாளர் கணேஷ்முத்து, நிருபர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி