கடலில் சிப்பிகளை எடுத்து விற்பனை; ஆட்சியரிடம் புகார் மனு

65பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து விதிமுறைகளை மீறி ஆளுங்கட்சியிணரின் துணையுடன் கடலின் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் டன் கணக்கில் சிப்பிகளை எடுத்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதி பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடற் பகுதியாகும் இங்கு பவளப்பாறைகள் அதிக அளவு காணப்படுவதால் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க பகுதியாக உள்ளது

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் கடற்கரை பகுதிகளில் விதிமுறைகளை மீறி கடலின் ஆழ பகுதிகளுக்கு விசைப்படகளில் சென்று டன் கணக்கில் கடல் சிப்பிகளை முறைகேடாக அள்ளி விற்பனை செய்து ஒரு கும்பல் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது ஆளுங்கட்சி துணையுடன் இந்த விற்பனை நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு கடலின் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் இவ்வாறு டன் கணக்கில் சிப்பிகளை அள்ளி செல்வதை தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி