தூத்துக்குடியில் மளிகை கடை பூட்டை உடைத்து பணத்தை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் பாலசுந்தர கணேசன் (70). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம்(அக்.5) இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று(அக்.6) காலையில் மீண்டும் கடையை திறக்க வந்துள்ளார்.
அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுந்தர கணேசன் கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்கு வைத்து இருந்த ரூ. 2 ஆயிரம் பணம் திருடுபோயிருந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.