தூத்துக்குடி அருகே போர்வெல் குழாய் உள்ளிட்ட ரூ. 1லட்சம் மதிப்புள்ள கருவிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம், நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் காளி மகன் நாராயணன் (55), ஆழ்துளை கிணறு அமைக்கும் ஒப்பந்ததாரரான இவர் கோவங்காடு அருகே ஒரு தனியார் இடத்தில் போர்வெல் போடுவதற்காக குழாய் உள்ளிட்ட தளவாட பொருட்களை வைத்திருந்தாராம்.
அதனை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டார்களாம். இதன் மதிப்பு ரூ. 1லட்சம் ஆகும். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் காவல் நிலையத்தில் நாராயணன் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி சூசைராஜ் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.