வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.
தமிழகம் முழுவதும் இன்று (16. 11. 2024) மற்றும் நாளை (17. 11. 2024) சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. மேலும்
18 வயது முடிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நிலை முன்பு இருந்தது. ஆனால் தற்போது 17 வயது முடியும்போது, ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம், சிவன் கோவில், புதிய பேருந்து நிலையம், ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம், உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் பேருந்துக்குள் இருந்த பயணிகளிடம் புதிய வாக்காளர் சேர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார் மேலும் புதிய வாக்காளரிடம் தங்கள் 2026 யில் வாக்களிக்க வாக்காளராக சேர்த்துக் கொள்ளவும் எனவும் கேட்டுக் கொண்டனர்.