ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை: ஜி. கே. வாசன் பேட்டி!

82பார்த்தது
ஆட்சி, அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என்று கூட்டணி கட்சியினர் நினைப்பது தவறு கிடையாது" என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் கூறினார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசனுக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் எண்ணமும் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற எண்ணமாக தான் இருக்க முடியும்.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கலாம். ஆனால் உண்மை நிலை அதுவாக தான் இருக்க முடியும். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று எந்த கட்சி நினைத்தாலும், இந்த காலத்தில் அது தவறு கிடையாது. அதையும் தாண்டி கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இலக்கை அடைய முடியும்.

தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் மது ஒழிப்பதில் உறுதியாக உள்ளனர். த. மா. காவை பொருத்தவரை மதுவில்லா தமிழகம் என்ற கொள்கையில் உறுதிபட உள்ளது. மது இல்லா தமிழகம் என்ற ரீதியில் ஒரு கோடி கையெழுத்தை வாங்கி ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளோம் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி