தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியிலுள்ள 62 செண்ட் நிலத்தை, அதன் உரிமையாளரான மெஞ்ஞானபுரம் பகுதியை சேர்ந்த சங்கரவேல் மகன் உதயகுமார் (54) என்பவர் 2006ம் ஆண்டு ஜெயபாண்டியன் என்பவருக்கு பொது ஆவணம் எழுதி கொடுத்து அந்த நிலத்தை ஜெயபாண்டியன் மோகனுக்கு கிரையம் செய்து கொடுத்து மோகன் என்பவர் மேற்படி நிலத்தை கடந்த 2010ம் ஆண்டு பிரின்ஸ் ரோசரி அருளானந்த் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்த நிலையில்,
மேற்படி நிலத்தை மோசடி செய்ய வேண்டும் எண்ணத்தில் ஏற்கனவே கிரையம் கொடுக்கப்பட்ட நிலத்தை உதயகுமார் தனது மனைவி சுகந்திக்கு தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்து மோசடி செய்ததாக மேற்படி பிரின்ஸ் ரோசரி அருளானந்த் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து மேற்படி உதயகுமாரை மாவட்ட குற்ற பிரிவு II போலீசார கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்டம் குற்றவியல் (IV) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குபேரசுந்தர் இன்று இவ்வழக்கின் குற்றவாளியான உதயகுமாருக்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூ. 10, 000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து, சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட செயல்பட்ட மாவட்ட குற்ற பிரிவு - II போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.