வாக்கு இயந்திரம் சீல் வைப்பு: ஐந்து அடுக்கு பாதுகாப்பு

59பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தூத்துக்குடி திருச்செந்தூர் கோவில்பட்டி ஓட்டப்பிடாரம் விளாத்திகுளம் ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு என்னும் மையமான தூத்துக்குடி அரசு வ உ சி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது

இந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வேட்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் மாவட்ட ஆட்சியரமான லட்சுமிபதி மாவட்ட தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெகாரா மற்றும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு அறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பின்பு இரண்டு பூட்டுகள் போடப்பட்டு அவற்றிற்கு சீல் வைக்கப்பட்டது இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தனது சீலை பதிவு செய்தார்


தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மேலும் 24 மணி நேரம் சிசிடிவி மூலம் வாக்கும் என்னும் மையம் கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது