கணவரை காணவில்லை; கொலையா? மனைவி போலீசில் புகார்!

52பார்த்தது
தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகு முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா கொத்தவேலை பார்த்து வருகிறார் இவர் தனது மனைவி வள்ளிநாயகி மற்றும் மூன்று குழந்தைகள் மகாராஜாவின் தந்தை செந்தில்வேல் குமார் மற்றும் தாய் ராணி ஆகியோருடன் ஒரு வீட்டிலும் இவர்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் இவரு தங்கை ராஜேஸ்வரி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்

இந்த நிலையில் வீட்டில் மகாராஜா மற்றும் அவர் அழைத்து வந்த நபர் ஆகியோர் தனியாக இருந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது

இந்நிலையில் இன்று காலை மகாராஜாவின் மனைவி வள்ளிநாயகி மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் மகாராஜா இல்லை அவர் அணிந்திருந்த சட்டை ரத்த கரையுடன் காணப்பட்டதுடன் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் ரத்தக்கரை ஆங்காங்கே கீழே இருப்பது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து குடும்பத்தினர் மகாராஜாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்துள்ளது


இதையடுத்து தனது கணவரை காணவில்லை என தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு நகர துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான காவல்துறையினர் வருகை தந்து விசாரணை நடத்தினர் இதை தொடர்ந்து மகாராஜா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எங்கும் இருக்கிறாரா மகாராஜா உடன் வந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி