வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

3619பார்த்தது
வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!
கோவில்பட்டியில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (48). இவரது மனைவி காளியம்மாள். இவர்களுடைய மகன் சுபாஷ் (24). இவர் சரக்கு வாகனத்தில் குடிநீர் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த 2000-ம் ஆண்டு காளியம்மாள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து பாலசுப்பிரமணியன், மகேஸ்வரி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார். அவர் மூலமாக 17 வயது மகன் உள்ளார். இந்நிலையில் சுபாஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டு, ஓட்டப்பிடாரம் அருகே ஓசனூத்து பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தார்.

இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன் மற்றும் அவருடைய 17 வயது மகனை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உதவியாக இருந்ததாக கோவில்பட்டி அசோக் நகரைச் சேர்ந்த சரஸ்வதி (45) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய காரையும், இரும்பு கம்பியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி