மோட்டார் சைக்கிள் விபத்தில் காவலாளி பலி!

85பார்த்தது
மோட்டார் சைக்கிள் விபத்தில் காவலாளி பலி!
தூத்துக்குடி மாவட்டம், கோட்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (52). இவர் எட்டயபுரம் அருகே நீராவிபுதுப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு காலையில் திரும்பி வருவது வாடிக்கை. இதன்படி, இவர் நேற்று காலையில் பணியை முடித்துவிட்டு, நீராவிபுதுப்பட்டி கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.

பிள்ளையார்நத்தம் அருகே சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓடியது. இதில் மோட்டார் ைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சுடலைமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மார்க்கண்டேயன் எம். எல். ஏ. , கோட்டநத்தம் கிராமத்தில் உள்ள சுடலைமுத்து வீட்டிற்கு சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி