மோடியின் வெறுப்பு பிரச்சாரத்தின் விளைவே இது: மனோ தங்கராஜ்

56பார்த்தது
மோடியின் வெறுப்பு பிரச்சாரத்தின் விளைவே இது: மனோ தங்கராஜ்
குஜராத் மாநிலம் வதோதரா மாநகராட்சியின் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது, பாரதிய ஜனதா கட்சி மக்களிடையே விதைத்திருக்கும் மத ரீதியான பிளவுபாட்டின் வெளிப்பாடே ஆகும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், தேர்தல் பிரச்சாரங்களில் மோடியின் வெறுப்பு பிரச்சாரம் வன்முறை மட்டுமல்லாது, இஸ்லாமியர்களை சமூகரீதியாக புறக்கணிக்கவும் தூண்டியதன் விளைவுதான் இன்று மக்கள் போராடும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது என விமர்சித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி