சாலையோர வியாபாரிகள் சாலை மறியல் - போலீசார் குவிப்பு

2599பார்த்தது
சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் - போலீசார் குவிப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகில் இராமர் மடம் குளம் உள்ளது. பல ஆண்டுகளாக பாழ்பட்டு கிடந்த இந்த குளத்தை நகராட்சி நிர்வாகம் தூர்வாரி சுத்தப்படுத்தி குளத்தின் கரையில் நடைபாதை பூங்கா அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. தற்போது குளத்தின் ஓரத்தில் 15க்கும் மேற்ப்பட்ட சாலையோர கடைகள் இருந்தன குளத்தின் பணிகள் நடந்ததால் சாலையோர கடைகள் போட அனுமதிக்கப்படவில்லை.

குளம் பணிகள் முடிந்து இதுவரை சாலையோர கடைகள் போட அனுமதிக்காததால் சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த பழைய பேருந்து நிலையம் அருகில் வந்தனர். அப்பொழுது காவல் துறையினர் மறித்ததால் சிஐடியு தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்களுடன் டிஎஸ்பி சோமசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்து கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி