தெரு நாய்களை பிடித்த ஊராட்சி ஊழியர்கள்

2227பார்த்தது
திருவாரூர் மாவட்டம் தண்டலை ஊராட்சியில் நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்திய ஊராட்சி நிர்வாகம்.

திருவாரூர் மாவட்டம் தண்டலை ஊராட்சி மிக முக்கியமான ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஏனைய முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. மேலும் பொதுமக்களும் அதிகம் பயணிக்க கூடிய இடமாக இந்த ஊராட்சி அமைந்துள்ளது.

இந்த நிலையில் இந்த ஊராட்சியில் பல இடங்களில் அதிலும் குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் நாய்கள் அதிகம் இருப்பதாகவும் அவற்றைப் பிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தண்டலை ஊராட்சியின் சார்பாக தண்டலை ஊராட்சியும் கும்பகோணத்தில் செயல்படும் பிராணிகள் நல அமைப்பும் இணைந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருவில் சுற்றித்திரிந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

பிடிக்கப்பட்ட நாய்கள் நவீன கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் இந்த பகுதிகளில் விடப்படும் என பிராணிகள் நல அமைப்பு அலுவலர்கள் தெரிவித்தார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி