மீனாட்சி மெட்ரிக் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா

75பார்த்தது
மீனாட்சி மெட்ரிக் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா
திருவாரூர் தர்ம கோவில் தெருவில் உள்ள மீனாட்சி மெட்ரிக் பள்ளியின் 29 ஆவது ஆண்டு இலக்கிய மன்ற நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதுநிலை தமிழ் ஆசிரியை பிரதீபா தலைமை வகித்தார். ஆசிரியை பிரியா வரவேற்றார். ஓய்வு பெற்ற பேராசிரியர் தாமரைச்செல்வி நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழின் சிறப்புகளையும் பெருமைகளையும் மாணவ மாணவியருக்கு எடுத்து கூறினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாராளர் ரமணி முன்னிலை வகித்தார் நிறைவாக பள்ளியின் முதல்வர் பிரபாவதி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி