மாங்குடி பள்ளியில் ஊட்டச்சத்தை உறுதி செய் விழா

63பார்த்தது
ஊட்டச்சத்தை உறுதி செய் இரண்டாம் கட்ட தொகுப்பு வழங்கும் விழாவையொட்டி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் இரண்டாம் கட்ட துவக்க விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட நிகழ்வை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை அடுத்து திருவாரூர் மாவட்டம் மாங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் ஒன்றிய பெருந் தலைவர் புலிவலம் தேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி