மது பாட்டில் வழங்காததால் மண்டை உடைப்பு

557பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மதுபான கடையில் இலவசமாக மதுபானம் வழங்காத ஆத்திரத்தில் டாஸ்மார்க் ஊழியரின் மண்டையை பீர் பாட்டிலால் அடித்து மண்டை உடைக்கப்பட்ட நிலையில் சமூகம் குறித்து மன்னார்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகள் கைது செய்வது குறித்து காவல்துறை காவலர்கள் பணியமித்து குற்றவாளிகள் தேடும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ருக்மணிபாளையத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக பாலசுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று இரவு 9. 50 மணிக்கு ஒரு நபர் இலவசமாக மதுபானம் கேட்டுள்ளார் கொடுக்க முடியாது என கூறியதன் காரணத்தினால் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து பாலசுப்ரமணியனின் மண்டையை உடைத்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பாலசுப்ரமணியனை அனுமதித்துள்ளனர். இது சம்பந்தமாக மன்னார்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி