நீடாமங்கலம் அருகே ரூ. 2.90 லட்சம் பறிமுதல்

1066பார்த்தது
நீடாமங்கலம் அருகே ரூ. 2.90 லட்சம் பறிமுதல்
நீடாமங்கலம் அருகே தனியாா் நிறுவன ஊழியா் உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ. 2. 90 லட்சம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

நீடாமங்கலத்தில் பறக்கும்படை அதிகாரி அண்ணாதுரை, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சிங்காரவேலு உள்ளிட்ட குழுவினா், தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆதனூா் மண்டபம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தனியாா் நிறுவன ஊழியரான தஞ்சை மாவட்டம் குமிழக்குடியைச் சோ்ந்த அருண் (27) என்பவரை நிறுத்தி சோதனையிடனா்.

அவரிடம், உரிய ஆவணமின்றி ரூ. 2, 90, 000 இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்து, மன்னா்குடி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் கீா்த்தனாமணியிடம் ஒப்படைத்தனா். பின்னா், அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி