திருவாரூர்: வயலில் உருண்ட தனியார் பஸ்; 20 பேர் படுகாயம்

2979பார்த்தது
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி இரண்டு தனியார் பேருந்துகள் சென்றுள்ளன. இரண்டு பேருந்துகளும் ஒவ்வொரு ஊரிலும் பயணிகளை விரைந்து சென்று ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மிக வேகமாக வந்துள்ளன. அப்பொழுது, திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் பகுதியில் தென்குடி ஆர்ச் அருகே வந்தபோது ஒரு பேருந்து மற்றொரு பேருந்தை முந்த முயன்றுள்ளது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து உருண்ட பேருந்து வயல்வெளியில் கவிழ்ந்தது. மற்றொரு தனியார் பேருந்து விரைவாக சென்றுவிட்டது. தொடர்ந்து விபத்தில் சிக்கிய தனியார் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், நன்னிலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து நன்னிலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி