மன்னார்குடி பாமணியில் முப்பெரும் விழா

59பார்த்தது
மன்னார்குடி பாமணியில் முப்பெரும் விழா
மன்னார்குடி சிவனடியார் திருக் கூட்டத்தின் 63 ஆம் ஆண்டு விழா மற்றும் திருவாசகம் முற்றோதல் விழா. மற்றும் திருவெம்பாவை திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா பாமணி நாகநாதசாமி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. தருமை யாதீன புலவர் குடவாசல் ராமமூர்த்தி தலைமையில் அடியார் பெருமக்கள் திருவாசகத்தினை முற்றோதல் செய்தனர். திருக்கயிலாய பரம்பரை துலாவூர் ஆதீனம் 29 ஆவது குருமஹா சன்னிதானம். ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிக ராஜ்ய ஞானபிரகாச தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள். கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார்கள். மேலும் திருவாரூர்ஆன்மீகம் ஆனந்தம். அமைப்பின் நிறுவனத் தலைவர் ஜே. கனகராஜ்க்கு சிவம் பெருக்கும் சீலர் என்கிற விருதினையும். மற்றும் மன்னார்குடி சிவனடியார் திருக் கூட்டத்தின் மூத்த சிவனடியார் ஜெயபாலுக்கு சிவநெறிச் செல்வர் என்கிற. விருதினையும் ஆதினம் வழங்கினார்கள் தொடர்ந்து திருப்பாவை திருவம்பாவை மற்றும் திருப்பள்ளி எழுச்சி ஒப்புவித்தல் போட்டியில் பரிசு பெற்ற ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு. சான்றிதழ்களையும் ஆதினம் அவர்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மன்னார்குடி சிவனடியார் திருக் கூட்டத் தலைவர் ராம. சிங்காரவேலன். செயலாளர் தங்கவேல் பொருளாளர் சுவாமிநாதன். மற்றும். சேரங்குளம் இமயன் ஆகியோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி