தமிழக அரசு அனைத்து கட்சி விவசாயிகள் கூட்டம் கூட்ட வேண்டும்

78பார்த்தது
தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தது. விவசாயிகள் தொடுத்த வழக்கில் தான் காவிரி நடுவர் மன்றம் அமைத்து இன்றைக்கு காவிரி மேலாண்மை ஆணையமும் அமைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பட வைப்பதிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பின்தங்கி வருகிறது.

குறிப்பாக கர்நாடக அனைத்து கட்சி கூட்டமே காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால் கர்நாடகம் மிகப்பெரிய சட்ட நெருக்கடிக்கு ஆளாகும் என அக்கூட்டமே ஒப்புக்கொண்டு தண்ணீரை திறப்பதற்கு அனுமதி அளித்து இருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசையும் காவிரி மேலாண்மை ஆணையத்தையும் வலியுறுத்தும் வகையில் கூட்டப்படுகிற கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் மட்டும் பங்கேற்பது என்று முடிவு எடுத்திருப்பது தமிழ்நாட்டில் நலனுக்கு எதிராக அமையும். காவிரி உரிமையில் ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகள் மற்றும் விவசாயிகளின் ஒற்றுமையை சீர்குழைக்கும் முயற்சியாகும் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு எடுத்திருக்கிற முடிவு காவிரி நலனுக்கு எதிரானதாக அமையும் என எச்சரிப்பதாக பி. ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி