சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞரின் தாய், சகோதரர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், தன் மீது அவதூறு பரப்பி வருவதாக மருத்துவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். சரியாக மருத்துவம் அளிக்கவில்லை என ஊடகங்களில் கூறி வருவதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.