மன்னார்குடியில் அதிமுக திமுக பிரமுகர்களுக்கு இடையே மோதல்

61பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஏழாவது வார்டு அதிமுக வார்டு செயலாளர் ரமேஷூக்கும் திமுக நகர மன்ற உறுப்பினரின் கணவர் சக்தி இருவிருக்கும் திமுக - அதிமுகவினர் இடையே கட்சியின் வளர்ச்சியில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு வந்தது, இந்த நிலையில் இன்று அதிமுக உறுப்பினர் ரமேஷ்னின் வளர்ச்சி பொறுக்க முடியாமல் திமுக நகர மன்ற உறுப்பினரின் கணவர் ரமேஷ், சக்தியிடம் தொடர்ந்து விரேதமுடன் இருந்து வந்துள்ளனர், இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தனியாக மோட்டார் சைக்கிளில் வந்த ரமேஷை மூன்று பேர் கொண்ட திமுக நகர மன்ற உறுப்பினரின் கணவர் சக்தி தலைமையிலான (சேனா ரவி, துரை, ) கும்பல் மன்னார்குடி கீழபாலம் மாரியம்மன் கோவில் தெரு அருகே அரிவாளால் தாக்குதல் நடத்தியது இதில் தலையில் வெட்டு காயங்களுடன் தப்பிய ரமேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைஐ அளிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மன்னார்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி